வெள்ளிக்கிழமை தேவதை


தூங்கும் போதும்
கண்ணை விட்டு
அகலா அழகு

சோம்பி நிற்கும் கோயில்
சிலையும் ஆவலுடன்
காத்திருக்கும் உன்
வருகைக்கான அழகு

கோலம் போடும் தரையும்
தரைபெறும் கோலமும்
உனக்காக ஒன்றுடன் ஒன்று
மோதிக் கொள்ளும் அழகு

சின்னக் குழந்தையும்
உன் கன்னம் தொட்டு
சிரித்துப் பார்க்கும் அழகு

சனி முதல் வியாழன்
வரை இல்லாத அழகு
வெள்ளிக்கிழமை அதிகாலைகளில்
மட்டும் உனக்கு வருவது எப்படி?



அபி.ஜெ
எதிரே வந்தவள் ....
11/26/2008 01:51:00 PM | Author:
எதிரே வந்தவள் ....

அவள் என் எதிரில் ..
உடன் அவர்
அவர் தாத்தாவாக இருக்கலாம்

கண்கள் அவளை பார்க்கிறது
இந்த கண்கள் என்னுடையது ..
கண்கள் என்னை பார்க்கிறது ..
இந்த கண்கள் அவளுடையது ..

ஒரு புன்னகை வருகிறது லேசாக
இந்த புன்னகை அவளுடையது ..
ஒரு வியப்பு வருகிறது ( நிஜமாவா !?!?! )
இந்த வியப்பு என்னுடையது

என்னின் எதிரே அவளில்லை
அவளின் எதிரே நானில்லை
பாதை கடந்தது
அவளும் அவரும் மறைந்தனர்

திரும்பலாமா ? திரும்பி பார்..
மனசு சொன்னது ...
ஒன்று என்னுடையது
ஒன்று அவளுடையது

திரும்பி பார்த்தோம்
ஒரே நேரத்தில் ..
சிரித்து கொண்டோம் ..
ஒரே நேரத்தில் ..

போய் வா பெயர் தெரியா தோழியே ..
மீண்டும் எதிரில் வர கடவோம் .....

அருண் . ஜெ