சுவாரசியங்கள் ........

உன்னிடம் சொல்லும் வரை
எந்த ஒரு சுவாரசியமும்
எனக்கு சுவாரசியமாக
தெரிவதில்லை ........
உனக்காக நிறைய
சுவாரசியங்கள் காத்திருக்கின்றன
மிகவும் சுவாரசியமாக .........

.........................................

உன் விரல் துடைத்த
என் ஒரு துளி கண்ணீருக்காக
ஆயுள் முழுதும் உன்னை அழாமல்
நான் பார்த்து கொள்கிறேன் -
என் அன்புக்குரிய தோழியே !!!

.........................................
மௌனங்கள் ......

உன் மௌனங்கள்
எனக்கு பழக்கம் ...
நீ பேசும் வார்த்தைகள்தான்
எனக்கு புரியவில்லை !!!!!!

.........................................

என்னை யாரிடமும்
நீ விட்டுகொடுதததில்லை ...
உன்னை விட்டுகொடுத்தேன்
உனக்காக ........

.........................................

கண்கள் வேறு எங்கோ
நிலைகுத்தி இருந்தாலும்....
உள்ளம் என்னவோ
நீ இருக்கும் திசை
நோக்கியே இருக்கிறது.....

...............................