கொஞ்ச நாளாய் மதுரை நகருக்குள் பைக் ஓட்ட
ஆரம்பித்து இருக்கிறேன்,
அதிலிருந்து சில அனுபவங்கள்.

வண்டியை ஓட்டும் போது 100 அல்ல 200௦௦ சதம்
கவனம் ரோட்டில் இருக்க வேண்டும்.
(என் நண்பன் பிரசன்னா அடிக்கடி சொல்லுவதுண்டு
"நான் பைக் எடுத்தா என் அப்பாவை நினச்சுட்டுதான்
வண்டிய எடுப்பேன், அப்போதான் கவனமா ஓட்டுவேன்")

புதியதாய் வண்டி ஒட்டும் சில பெரியவர்கள்,
பதட்டத்தில் வண்டி ஓட்டுபவர்கள்,
குடி போதையில் வருபவர்கள்,
கவனம் சிதறியவர்கள்
இவர்கள்தான் ரோட்டில் தாறுமாறாக
வருவார்கள், சடாலென ரோட்டின் குறுக்கே
நுழைவார்கள். எச்சரிக்கை.

இன்டிகேட்டரை போட்டு விட்டு வண்டியை உடனே
திருப்பாதீர்கள். இப்படி செய்தால் கண்டிப்பாக உங்கள் பின்னே
வருபவர் உங்கள் மேல் இடித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது
திரும்ப வேண்டிய இடத்திற்கு சற்று
முன்னே இன்டிகேட்டரை போடவும்.

நகருக்குள் எப்போதும் மித வேகத்தில் செல்வது நல்லது,
அப்போதுதான் குறுக்கே எல்லாரையும் சமாளித்து வண்டி ஓட்டலாம் ,
இன்டிகேட்டரை போட்டும், போடாமலும் தடாலென
திரும்பும் ஆட்களிடம் இருந்து தப்பிக்க முடியும்.

சில சமயம் வலதுபுறம் வரும்
வாகனத்தை கவனித்து கொண்டு முன்னே சென்று
கொண்டு இருக்கும் வாகனத்தில் "டமால்" செய்ய கூடும்.கவனம்.

பெங்களூர் போன்ற நகரங்களில் ஆயிரம் வண்டிகள் ரோட்டில்
சென்றாலும், அந்த பயணம் மிக நேர்த்தியானதாக இருக்கும்.
ஆனால் நமது ஊரில் அதெல்லாம் நீங்கள் எதிர் பார்க்க முடியாது.

ஆகவே, கவனம் "எங்கேயும் எப்போதும்"
ஒல்லியாகனும் , குண்டாகனும் !!!
---------------------------------
குண்டான ஒருவனும்
ஒல்லியான ஒருவனும்
சந்தித்து கொண்டார்கள்.
"குண்டாவது எப்படி ?"
ஒல்லியானவன் கேட்டான் .
குண்டானவன் மூன்று
வேலையும் சாப்பிட
வேண்டியதை சொன்னான்.
சரி , "ஒல்லியாவது எப்படி ?"
குண்டானவன் கேட்டான் .
ஒல்லியானவன் சொன்னான்
"காதல் செய் அல்லது
கவலை படு ".
அம்மாவும் , சாக்லேட்டும் !!!!!!
--------------------------------
அன்புள்ள அம்மாவுக்கு ,
எவ்ளோ அடம்பிடிச்சாலும்
ஒரு சாக்லேட்டுக்கு மேல்
வாங்கி தராத அப்பா
இப்போலாம் நிறைய
சாக்லேட் வாங்கி தருகிறார் ;
சாமிகிட்ட போன உன்னை மறக்க .
எனக்கு சாக்லேட் வேண்டாம்மா
நீதான் வேணும் .
சீக்கிரம் இங்க வாம்மா !!!